ஒப்பந்தம் கையெழுத்தானது


சைஃபுத்தீன் ரஷாதியுடன் கடந்த 26-8-2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர் பட்டிணத்தில் 101 தலைப்புகளில் விவாதம் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது. அல்ஹம்துலில்லாஹ்!








    விவாத ஒப்பந்த வீடியோ விரைவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்

கீழ்கண்ட ஒப்பந்தத்தில் கூறியபடி கடந்த 30.8.2012 அன்று நமது தரப்பு விவாத குழுவில் இடம் பெறுபவர்கள் பட்டியல் அனுப்பப்பட்டது.  ஒப்பந்த நகலுக்கு கீழே பார்க்கவும்


விவாத ஒப்பந்த நகல்
Click Here to download



விவாத குழு பட்டியல்
Click Here to download


ஷைஃபுத்தீன் ரஷாதியுடன் விவாத ஒப்பந்ம்


கடந்த 25 ஆண்டுகளாக பல மேடைகளில் விவாதச் சவடால் விட்டுவிட்டு நம்மிடமிருந்து ஓடி ஒளிந்து கொண்டிருந்த ஷைஃபுத்தீன் ரஷாதியுடன் விவாத ஒப்பந்தம் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 26.08.12 அன்று நடைபெற உள்ளது. 

அது குறித்த பி.ஜே மற்றும்
ஷைஃபுத்தீன் ரஷாதி ஆகியோருக்கிடையே நடைபெற்ற கடிதப்போக்குவரத்துக்களை கீழே தருகின்றோம்


1. 17.7.2012 அன்று ஷைஃபுத்தீன் ரஷாதி அனுப்பிய கடிதம்  Click Here to download

2. 30.7.2012 அன்று தவ்ஹீத் ஜமாஅத் அனுப்பிய பதில் கடிதம்
Click Here to download

3. 13.8.2012 அன்று ஷைஃபுத்தீன் ரஷாதி அனுப்பிய கடிதம்
Click Here to download

4. 17.8.2012 அன்று தவ்ஹீத் ஜமாஅத் அனுப்பிய பதில் கடிதம்
Click Here to download

5. 19.8.2012 அன்று ஷைஃபுத்தீன் ரஷாதி அனுப்பிய கடிதம்
Click Here to download

6. 19.8.2012 அன்றே தவ்ஹீத் ஜமாஅத் இறுதியாக அனுப்பிய பதில் கடிதம்
Click Here to download




மரைக்காயர் பட்டினம் நோன்பு பெருநாள் திடல் தொழுகை – 2012



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர் பட்டினம் சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்



யார் சுன்னத் ஜமாஅத்?


சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை
கோதரர்களே சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளது.
சுன்னத் என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதையெல்லாம் செய்தார்களோ மேலும் தாம் செய்ததை மக்களுக்கும் ஏவினார்களோ அவைகளை பின்பற்றுவது சுன்னத் எனப்படும். நபிகளார் (ஸல்) அவர்கள் வாழ்ந்துக்காட்டிய விதத்தை அல்லாஹ் அங்கீகரித்து அதை ஒவ்வொரு முஸ்லிமும் பேண வேண்டும் என்று வலியுறுத்திவிட்டான். இதோ ஆதாரம்
அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)

ங்கு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் என்று கூறப்பட்டுள்ளதை சற்று கவனிக்கவும்.
  • அல்லாஹ்வின் வார்த்தைகளான அருள்மறை குர்ஆனுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வுக்கு கீழ்படிந்தும்.
  • அல்லாஹ்வுடைய தூதரது வழிமுறை மற்றும் அறிவுரைகளுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வின் தூதருக்கும் கீழ்படிய வேண்டும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்
    மேற்கண்ட இரண்டிற்கும் கட்டுப்படும்போது ஒரு முஸ்லிம் தவ்ஹீத் என்ற ஓரிரைக்கொள்கையை ஏற்றுக்கொள்கிறான் இந்த இரண்டில் ஒன்றை நிராகரிக்கும் போது முஷ்ரிகாகவோ, முனாஃபிக்காகவோ மாறிவிடுகிறான்!
அல்லாஹ்வுக்கு கட்டுப்படுதலுக்கு உதாரணம்
அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்காதீர்கள் என்று அருள்மறையில் அல்லாஹ் கூறுகிறான் நாம் அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அல்லாஹ்வை மட்டும் வணங்குகிறோம்! இங்கு அல்லாஹ்வுக்கு கட்டுப்படுகிறோம்!

நபிமார்களுக்கு கட்டுப்படுதலுக்கு உதாரணம் 
எந்த நபிமாரும் அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் கை ஏந்தி பிரார்த்தித்ததில்லை! தங்களின் குழந்தைகளுக்கும், தங்களுக்கும்  மரண நேரம் நெருங்கிய போது கூட அல்லாஹ்விடமே அழுது பிரார்த்தித்தார்கள். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மைக் கூட யாரும் வணங்கக்கூடாது என்று கட்டளையுடன் கூடிய அறிவுரையை நமக்கு விட்டுச்சென்றுள்ளார்கள்.
இந்த நபிமார்களின் அறிவுரையைக் கேட்டு அதன்படி அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வணங்கமாட்டோம் மேலும் அல்லாஹ்வின் தூதர் காட்டிய வழியல் அல்லாஹ்வை பிரார்த்து முற்றிலும் தூதர்களின் வழியில் நடப்போம். இதை சுன்னத் ஜமாஅத் என்று கூறும் கப்ருவணங்கிகள் செய்கிறார்களா?

சுன்னத்திற்கு மாற்றமாக நடக்கும் சுன்னத்ஜமாஅத்
சகோதரர்களே சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளதாக நான் முன்பே கூறியிருந்தேன் அதை வெளிச்சம் போட்டு காட்டவா?  சுன்னத் என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது இதன் அடிப்படையில் சுன்னத் ஜமாஅத்தை அட்டவணைபடுத்தலாமா?
நபி வழி சுன்னத்
சுன்னத் ஜமாஅத்
எப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலும் அல்லாஹ்வின் மேல் முழு ஈமான் கொண்டு அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடுவது.
சாதாரண எறும்பு கடித்தால் கூடா யா! கவுஸ், நாகூர் ஆண்டவரே, என்று ஈமானை பரிகொடுத்து அவ்லியாவிடம் அவ்லியாவிடம் குய்யோ முய்யோ என்று கதறுவது, உதவி தேடுவது
அல்லாஹ்விடம் மட்டுமே அழுது துவா செய்வது
அவ்லியாவிடம் அழுது துவா கேட்பதை தெய்வீகமாக கருதுவது
இணைவைப்பு வழிபாடு கிடையாது
சமாதி வழிபாடு முக்கியத்துவம்
மார்க்கத்தில் புதுமையை புகுத்துவதை தடுப்பது!
மார்க்கத்தில் நாள்தோறும் புதுமையைத்தான் புகுத்துவது
நபிமார்கள் முதற்கொண்டு எந்த மனிதருக்கும் அற்புத சக்தி கிடையாது என்றும் அவர்கள் அல்லாஹ்வை சார்ந்தவர்கள் என்றும் நம்புவது! அதில் உண்மையாக நிலைத்து நிற்பது
பச்சை ஆடை உடுத்தி, தாடி வைத்துக்கொண்டு ஒருவர் வந்துவிட்டால் போதும் அவர்தான் அவ்லியா என்று நம்பி அவரிடம் முரிது, பைஅத்,  தீட்சை என்று நம்பி மோசம் போவது!
அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த துவாக்கள், வணக்க வழிபாகளை மட்டும் மேற் கொள்வது
ஸலவாத்துன்நாரியா, மவ்லூது, ஷிர்க், கஜல் என்று கண்டதையெல்லாம் நம்பி மோசம் போவது!
இணைவைப்பது பாவம் என்றும் மறுமையில் நரகம் உறுதி என்று பயந்து அல்லாஹ்வை மட்டும் வழிபடுவது
இணைவைப்பது புண்ணியம் என்றும் மறுமையில் அவ்லியாக்கள் கைகொடுப் பார்கள் என்றும் நம்பி அல்லாஹ்வுக்கு இணையாக செத்துப்போன மனிதர்களை கருதுவது!
அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக வாழ்ந்து மடிவது!
இணைவைத்து அல்லாஹ்வுக்கு துரோகம் செய்து நன்றிகெட்ட மனிதனாக வாழந்து மடிவது